இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Tuesday, December 29, 2009

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-30

போன இடுகையில் நீயூட்டனின் விதிகளும் வேலை செய்யும் என பாத்தோம். எப்படின்னா பெரிய பொருட்களுக்கு குவாண்டம் சம்ன்பாடுகளை உபயோகப்படுத்தினா அது நீயூட்டனின் சம்ன்பாடுகளில் தான் வந்து நிக்கும். (இது பத்தி மேலும் வேண்டும்னா சொல்லுங்க தெளிவா விளக்கலாம்)

இதுவரைக்கும் பாத்தது ஒரு சில வரிகளில்

1. துகள்கள் அலையாகவும் துகளாகவும் இயங்கும்.
2. துகள்கள் இருக்கும் இடம் மற்றும் வேகத்தை மிகச்சரியாக ஒரே நேரத்தில் சொல்லமுடியாது.
3. இவைகள் எல்லாம் துகள்களுக்கு தான்.
4. அடிப்படை விசைகள்
     அ. மின்காந்த விசை
     ஆ. புவியீர்ப்பு விசை
     இ.  வலு விசை
      ஈ. குறை விசை


இதுவரைக்கும் பார்த்த துகள்கள் மூணுதான், எலக்ட்ரான், புரோட்டான், நீயூட்ரான். இந்த மூணுமே அணுக்குள்ள இருக்கு என பார்த்தோம். இது மட்டும் இல்லாம சில,பல துகள்களும் இருக்குது. இன்னொரு சங்கதியும், இந்த மூணு துகள்களையும் உடைச்சா இன்னும் நிறைய துகள்கள் கிடைக்கும். :-)

ஆமா அப்படி உடைச்சு வரும் துகள்களை குவார்க் என சொல்றாங்க. கூடவே அண்டவெளியில் இருந்து வரும் துகள்கள், எதிர் துகள் என நிறைய இருக்கு. வரும் பதிவுகளில் இவைகளில் விளக்கத்தை பார்க்கலாம்.

ராஜசங்கர்

2 comments:

gobi said...

படிக்க ஆவலாக உள்ளது .தொடர்சியாக எழுதுங்கள்.KARUTHTHU பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன் .முடியுமா?(சில கேள்விகள் தான்)
GOBI (JAFF)

rajasankar said...

gobi
கருத்துக்கள் தானே. தாராளமாக பரிமாறிக்கொள்ளலாம். பின்னூட்டத்தில் கேளுங்கள். தேவைப்பட்டால் தனிப்பதிவே போட்டுவிடலாம்.

Post a Comment