இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Friday, February 19, 2010

அறிவிப்பு

நண்பர்களே,

சொந்த வேலை பளு அதிகமாக இருப்பதால் இத்தொடரை தொடர முடியவில்லை. மேலும் இன்னும் மூன்று வாரங்கள் இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதால் பங்குனி முதல் வாரத்தில் (ஆங்கிலம் மார்ச் இரண்டாம் வாரம்) இருந்து இத்தொடர் தொடரப்படும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

ராஜசங்கர்.

Monday, February 8, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-34

இப்ப எதிர்துகள் அப்படீன்றத பத்தி பார்கலாம். துகளும் எதிர்துகளும் மோதினா இல்ல சந்திச்சா இரண்டும் அழிந்து அங்கு வெறும் ஆற்றல் மட்டுமே மிஞ்சும். எதிர்துகள் சாதாரண துகளோட எதிர் பண்புகளை மட்டும் பெற்றிருப்பதனாலேயே இது நிகழ்கிறது.

இந்த மோதும் நிகழ்வில் வெளிப்படும் ஆற்றல் அந்த துகள்களின் எடையை பொறுத்து இருக்கும். இதுக்குண்டான சமன்பாட்டை முன்னாடியே பார்த்தாச்சு.

ஏன் இந்த எதிர் துகள் இருக்கனும் அப்படீன்ற கேள்விக்கு முன்னாடி இந்த பிரபஞ்சம் தோன்றினப்ப இந்த துகள்களும் எதிர்துகள்களும் சரி சமமா இருந்திருக்குமா? அப்படி இருந்திருந்தா இன்னைக்கி இந்த உலகமே இருந்திருக்காது இல்லையா, அப்படீனா ஏன் கம்மியான எதிர் துகள்கள் மட்டுமே இருந்தது என்ற கேள்வி இன்னைக்கும் ஆராய்ச்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்துக்கிட்டுதான் இருக்கு.

சரி, இந்த எதிர்துகள்களை எல்லாம் புடிச்சு வச்சுகிட்டு இந்த ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் கதையில் வர்ர மாதிரி ஒரு வெடிகுண்டோ இல்ல மின்சாரம் தயாரிக்க நிலக்கரிக்கு பதிலா உபயோகிக்க முடியுமானா அதான் கிடையாது.

ஏன் முடியாது? ஒரு கிராம் எதிர் துகள்கள் சேர்க்க நூறு கோடி வருடங்கள் ஆகும். அதுக்கு ஆகும் செலவோ ஒன்றுக்கு பக்கத்தில் பதினைந்து பூஜ்யங்கள் போட்டா எவ்வளவு வருமோ அவ்வளவு டாலர்கள் ஆகும்.

மத்த துகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம்.