இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Saturday, May 15, 2010

உயிர்தளிப்பு கொள்கை -1

இந்த உயிர்தளிப்பு அல்லது பரிணாமக்கொள்கை அப்படீன்றாங்களே அப்படீன்னா என்ன என எனக்கு தெரிந்த வரையில் விளக்க முயல்கிறேன். பொதுவாவே இந்தக்கொள்கைக்கு மதவாதிகள் கிட்ட இருந்து நிறைய எதிர் வாதங்கள் வரும்.

டார்வின் கொள்கை தப்பு,
அதை நிறைய பேர் நம்பல,
இதுக்கு என்ன ஆதாரம்,
இத யாரும் கண்ணால பாத்துருக்காங்களா இப்படி, கூடவே எப்போதும் கேட்கப்படுவதான

குரங்கில் இருந்து மனுசன் வந்தான்னா ஏன் இன்னும் குரங்குகள் இருக்குது?


இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கலாம்னு நினைச்சிதான் இந்த பதிவு. இந்த கேள்விகள் எல்லாவற்றையும் பாத்துட்டு பின் ஆற அமர கொள்கையை விளக்கலாம்.

1. குரங்கில் இருந்து மனுசன் வந்தான்னா ஏன் இன்னும் குரங்குகள் இருக்குது?
     இந்த கேள்வி இன்னொரு விதமாவும் கேட்கப்படும், ஏன் எல்லா குரங்குகளும் மனுசன் ஆகல? முதல்ல இந்த கேள்வியே தப்பு. டார்வினோட கருத்துப்படி மனிதனுக்கும் குரங்குக்கும் மூதாதை ஒன்னுதான்னு சொன்னார். அதாவது மனிதர்கள், வாலிலா குரங்குகள் எனப்படும் சிம்பன்ஸி, கொரில்லா போன்றவைக்கும் மூதாதை ஒன்னுன்னு சொன்னார். இதுக்கு வேற ஒரு உதாரணம் பார்ப்போம்.

நாம வீட்டில் வளர்த்துர நாய்கள், பூனைகள் போன்றவற்றின் இனம் காட்டிலும் உண்டு. காட்டு நாய், காட்டுப்பூனை ன்னு பொதுவா அதிலும் சொன்னாலும் இனங்கள் உண்டு. மனிதன் இந்த காட்டு விலங்குகளை பிடிச்சுக்கிட்டு வந்து பயிற்சி கொடுத்து தனக்கு தேவையான மாதிரி மாத்திக்கிட்டான். இதனால என்னாச்சு, வீட்டுல வளர்ந்தவை தனி உயிரினமா மாறிடுச்சு. இது தானாவே நடந்தா அது தான் உயிர்தளிப்பு.

இந்த வீட்டு விலங்குள் உதாரணத்தை நம்ம பயிரிடும் பயிர்களுக்கும் சொல்லலாம். காட்டுக்கத்தரி, காட்டு நெல் இப்படி உதாரணங்கள் இருக்கு. இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன், குரங்கும் மனிதனும் எவ்வாறு ஒரே நேரத்தில் இருக்க முடியும்ன்னு.

சரி, இப்போ நிறைய விலங்கு இனமே அழிஞ்சுகிட்டு வருது. புலி,சிங்கம்,காண்டாமிருகம் போன்றவை ஒரு உதாரணம். மனிதன் நாளைக்கு இதே மாதிரி குரங்குகளையும் வேட்டையாடி கொன்னா இப்படி கேள்வியும் கேக்க முடியாது, இருக்கும் சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடிபவை தான் உயிரோடு இருக்கும் என்ற டார்வினின் கொள்கையும் சரியா இருக்கும்.

2. உயிர்தளிப்பு இன்றும் நடக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில், ஆமாம் இன்றும் நீங்கள் இதை படிக்கும் போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணம், பூச்சி வகைகள். உலகத்தில் இருக்கும் பூச்சி வகைகளை ஒரு பட்டியல் போடவே முடியாது, ஏன்னா, வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் பூச்சி வகைகள் அழிந்து மற்ற வகைகள் உண்டாகும். வாழ்நாள் குறைவா இருக்கும் உயிரினங்களில் இந்த தளிப்பை நல்லாவே பார்க்கலாம்.

இன்னொரு உதாரணம், நைலான் ஐ உணவாக கொள்ளும் பேக்டீரியா. இது பிலாபேக்டீரியம் என்ற பேக்டீரியாவின் ஒரு வகை. இது நைலான்- 6 தயாரிப்பில் வெளிவரும் துணை பொருட்களை ஜீரணிப்பதற்கான என்சைம்களை உருவாக்கியது. இந்த என்சைம்கள் வேறு பொருட்கள் மீது செயல்படவில்லை. நைலான் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதாலும், இதன் வேதிவினை பொருட்கள் முன்பு இல்லாததாலும் இந்த பேக்டீரியா நைலான் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே உருவானது.

இது மட்டுமல்லாது, வயல்களில் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகள், அவைகளை கொல்வதற்காக தெளிக்கப்படும் மருந்துகளையே ஜீரணிக்கும் ஆற்றல் பெற்று விடுவதும் உயிர்தளிப்பு, நம் கண்ணெதிரே நடப்பதற்கு உதாரணமாகும்.

மற்ற கேள்விகளுக்கு பதில்கள் தொடரும்.

ராஜசங்கர்.

5 comments:

R said...

Arumai..

தருமி said...

முயற்சிக்கு வாழ்த்துகள்.

உயிர் தளிப்பு என்பதன் பொருளை விளக்க முடியுமா?

rajasankar said...

அன்பின் தருமி,
வருகைக்கு நன்றி.

பரிணாமம் என்பதை தான் உயிர்தளிப்பு என சொல்லியிருக்கிறேன். சிறு சிறு மாற்றங்கள் மூலம் ஒரு உயிரினம் புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் தான் உயிர்தளிப்பு.

yasir said...

மிக நன்றாக உள்ளது மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அவர்களுக்கு களிமண்ணை எடுத்து பானை செய்து அதற்கு உயிர் கடவுளால் அருளப்பட்டது அது மனிதப்பானை என விளக்கமாகச் சொன்னால் தான் நன்றாக விளங்கும். பழைய குப்பைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமாட்டார்கள்.

Samsudeen said...

குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்றால்????
அப்ப மனித்னிலிருந்து இன்னொரு உயிர்தளிப்பு எப்பொழுது வரும்? வந்துடுச்சா? அல்லது வந்துகிட்டே இருக்குதா? அல்லது வருமா? சுமார் 2011 வருடங்களாக இதுவரைக்கும் ஏதாவது வந்து இருக்குதா?
ரொம்ப நல்ல ஆராய்ச்சி செய்றீங்க; அப்படியே கீழே உள்ள லிங்கையும் படிங்க.....
http://carbonfriend.blogspot.com/2010/11/7.html
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் இதைப் படிப்பவர்களுக்கும் நேர் வழிகாட்டுவானாக!
என்றும் அன்புடன்,
ஷம்சுத்தீன்.

Post a Comment