இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Tuesday, May 18, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-36

இவ்வளவு நாளா குவாண்டம் தியரி ன்னு எழுதிட்டு என்ன புதுசா அடிப்படை அமைப்பு ன்னு ஒன்னு உள்ள வருதே ன்னு யோசிக்கறவங்களுக்கு இந்த விளக்கம்.

குவாண்டம் கொள்கை என்பது நீரூபிக்கப்பட்டது. ஆனா தனிப்பட்ட விளைவுகளை மட்டும் விளக்ககூடியது. இங்க தனிப்பட்ட நிகழ்வு ங்கிறது ஒரு துகள் இன்னொரு துகளோட மோதினா என்னாகும் அப்படீங்கற மாதிரி. இது பல பிரிவுகள் உள்ளது. குவாண்டம் இயங்கியல், குவாண்டம் நிற இயங்கியல் என்பன. ஆனா இந்தெல்லாம் பண்றதுக்கு என்ன காரணம், உலகில் இருக்கும் விசைகள் எப்படி இயங்குகின்றன? எடை எப்படி வருகிறது? இந்த மாதிரி கேள்விகளுக்கு இந்த மாதிரியான தனிப்பட்ட கொள்கைகளால் பயனில்லை அப்படீன்றதால இதையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு படம் போட முயற்சி பண்ணினது தான் இந்த அடிப்படை அமைப்பு.

இங்கு இன்னொரு தகவலையும் பார்க்கனும். இந்த அடிப்படை அமைப்பு மட்டும் தான் இந்த ஒருங்கிணைப்ப செய்ய முயற்சிக்கல. மற்றயவையான ஸ்டிரிங் கொள்கை, அதி புவியீர்ப்பு விசை கொள்கை என பலவும் உணடு. ஆனா இதுகள்ள எதுவும் முழுசா இல்ல அப்படீன்றது தான் உண்மை.

சரி, இப்போ இந்த அடிப்படை அமைப்ப கொஞ்சம் விவரமா பார்க்கலாம். இதுல பொருளும் விசையும் தான் உலகின் அடிப்படை அலகாக பார்க்கப்படுகிறது. துகள்கள் முதல் நிலை துகள்கள் எனவும், விசை ஏற்பான் எனவும் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

அடிப்படை விசைகள் நான்கு என முன் பதிவுகளிலியே பார்த்தோம். அதில் புவியீர்ப்பு விசை இந்த அமைப்பில் வராது. ஆனாலும் அதுக்கும் துகள்கள் இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க. அதே மாதிரி தான் ஐன்ஸ்டைன்னின் சார்பியல் விதியும். அதுவும் இதில் வராது.

அடுத்த பதிவில் எது எது இதில் வரும்? குவாண்டம் தியரி எப்படி இதெயெல்லாம் புரிந்து கொள்ள உதவுதுன்னு பார்ப்போம்.

ராஜசங்கர்.

4 comments:

கார்மேகராஜா said...

எளிதாக புரிகிறது! இன்னும் கொஞ்சம் நீளமான கட்டுரையாக பதிவேற்றம் செய்க நண்பா!

Robin said...

துகள் என்றால் மூலக்கூறா (molecule) அல்லது அணுவா (atom)?

rajasankar said...

ராபின்,

எலக்டரான், புரோட்டான் எல்லாம் குறிப்பிட துகள் என உபயோகப்படுத்தி உள்ளேன். அதாவது particle

rajasankar said...

கார்மேக ராஜா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது கொஞ்சம் சிரமாமான சேதி என்பதால் தான் சிறிய பதிவுகள். பெரிய பதிவாகவும் முயற்சிக்கலாம்.

Post a Comment