இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Thursday, June 17, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-40

இந்த பதிவுல துகளோட தன்மைகள் பத்தி பார்க்கலாம். பொதுவாவே தன்மைகள் அல்லது குணங்கள் அல்லது இயல்புகள் அப்படீன்னா எளிதாக புரியறமாதிரி தான் இருக்கும். ஆனா இந்த துகளின் தன்மைகள் அப்படி இருக்காது. அவைகளும் குவாண்டம்(சிறிய) ஆக்கி தான் சொல்லப்படும். ஆனாலும் மூலக்கூறுகள், தனிமங்களுக்கு இருப்பது போல், முன்னாடி படிச்ச விசைகள் ஒவ்வொன்னும் கட்டுப்படுத்தும் அல்லது தொடர்புடைய தன்மைகள் உண்டு. எடுத்துக்காட்டா புவியீர்ப்பு விசைக்கு எடை.

சரி இதுகளை ஒன்னு ஒன்னா பார்ப்போம்

1. எடை
முதல் தன்மை இது. எடையில்லாத துகள்களும் உண்டு அப்படீன்றத பார்த்திருக்கோம். புவியீர்ப்பு விசைக்கு இது தொடர்புடையது என்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இதிலும் நேர் துகள்கள் ஒரு எடையும் எதிர் துகள்கள் கொஞ்சம் அதிகமாகவோ குறைவாகவோ எடை கொண்டவை.

2. மின்னேற்றம்.
இது மின்-காந்த விசையோடு தொடர்பு கொண்டது. இதவச்சுதான் ஒரு துகள் நேர் துகளா எதிர் துகளான்னு தீர்மானிக்கறாங்க. இதுக்கு நேர்,எதிர்,நடுநிலை என மூன்று பிரிவுகள் உண்டு. பெரும்பாலான துகள் கள் இந்த அடிப்படையை கொண்டவை. சிலதுகள்கள் இந்த ஆட்டைக்கு வராம போறதும் உண்டும். அது பத்தி பின்னாடி

3. ஆயுள் காலம்
இத ஒரு துகள் இன்னொரு துகளாக மாற எவ்வளவு நேரம் பிடிக்கும் அல்லது அப்படியே நிலையாக இருக்கமா என சொல்லும் பண்பு. இத தனிதனி துகளுக்கு சொல்லாம இவ்வளவு துகள் மற்றொன்றா மாற இவ்வளவு நேரம் பிடிக்கும் எனவும் சொல்லுவாங்க. 

4. சுழற்சி
இந்த சுழற்சி அப்படீன்றது ஒரு பம்பரம் சுத்துனா ஒரு விநாடிக்கு எவ்வளவு சுத்து சுத்துன்னு சொல்றமாதிரி தான் ஆனா கொஞ்சம் வித்தியாசம் ஆனது. பம்பரம் ஒரு சுத்து சுத்த இவ்வளவு விநாடிகள் எடுத்துக்குது என சொல்லுவோம் இல்லையா ஆனா இதுக்கு அப்படி சொல்ல முடியாது. ஏன்னா இதோட சுழற்சி என்பது 360 பாகைகளுக்கு மேல இருக்கும். இத பத்தி விரிவா அப்புறமா பார்க்கலாம்.

5. நிறம்
நிறம் அப்படீன்னா பச்சை,சிகப்பு ன்னு நினைச்சிக்காதீங்க. முந்தைய பதிவில் குவார்க்குகள் ஆறுவகையாக பிரிக்கபடுதுன்னு பார்த்தோம் இல்லையா அந்த ஆறு வகைகள் தான் இந்த நிறங்கள். இதுவும் சுழற்சி மாதிர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும். இந்த தன்மை வலு விசையோட தொடர்பு உடையது

மேற்சொன்ன தன்மைகளை வச்சே துகள்களை புரிஞ்சுக்க முடியும். இந்த தன்மைகளை பத்தி விரிவா அடுத்த பதிவுல பார்க்கலாம்

Wednesday, June 9, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-39

இந்த பதிவில் அடிப்படை துகள்கள் தவிர மற்றயவை பத்தி பார்க்கலாம். போன பதிவுக்கு முன் பதிவுல அடிப்படை துகள்கள் 17 ன்னும் மற்றயவை இருநூறு க்கும் மேல் வரும் என பார்த்தோம். அந்த துகள் எல்லாம் இடைப்பட்ட துகள். இந்த துகள்களின் ஆயுசு ரொம்ப குறைவு. அதாவது தோன்றிய உடனே இவைகள் வேறு துகளாக மாறிடும். அப்படீன்னா இவைகளை எப்படி கண்டுபிடிக்கறாங்க? எல்லாம் கணிணியும் மற்றைய மிண்ணணு சாதங்களின் மூலமாகத்தான். எப்படி கண்டுபிடிக்கறாங்க என்பது பற்றி பின்னால் பார்க்கலாம்.

வேதியியலில் இரண்டு பொருட்கள் வினை புரிந்து மற்றொன்றாக மாறும் என படிச்சிருப்போம் இல்லையா? இங்கேயும் அதேமாதிரி தான். கீழ்க்கண்ட மாதிரி இருக்கும்

பாதரசம்-197 ----> தங்கம்-197 + நேர் கேயான்

இந்த கேயான் எனும் துகள் ஒரு நொடியை ஒன்றுக்குக்குப் பக்கத்தில் எட்டு பூஜ்ஜியங்கள் போட்டு வகுத்தால் கிடைக்கும் நேரமே இருக்கும். நெம்ப கம்மி நேரம் தான் இருக்கும். பின்பு அது குவார்க்குகளாக பிரிந்துவிடும்.

சரி, இந்த இடைப்பட்ட துகள்கள் அனைத்தையும் அடிப்படை துகள்கள் மூலம் சொல்லமுடியும் அல்லது இவை உருவான உடனே வேறு துகள்களாக மாறி விடுகின்றன என்றால் இவைகளால் என்ன பயன்? இந்த கேள்விக்கு பதிலளிக்க இதுவரை பார்க்காத பெரு வெடிப்பு கொள்கையை பார்க்கவேண்டும். இதுவும் என்ன புதிசா உள்ள வருதுன்னு கேக்குறங்களுக்கு பதில். பெருவெடிப்பு, சார்பியல் கொள்கை, அடிப்படை அமைப்பு, குவாண்டம் கொள்கை இவை எல்லாமே தனித்தனியா ஒரு செயலையோ அல்லது ஒரு அமைப்பையோ விளக்குபவை . ஆனா இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு கொள்கை வரலை. இதுக்குதான் எல்லாரும் முயற்சி செய்றாங்க.

பெருவெடிப்பு கொள்கை என்பது இந்த பிரபஞ்சம் ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கோடி வருடங்களுக்கு முன் நடந்த வெடிப்பு மூலம் தோன்றியது. அப்போது இப்போது இருக்கும் இயற்பியல் விதிகள் ஏது அங்கு வேலை செய்திருக்காது. பெருவெடிப்பின் மூலம் தோன்றிய நுண்ணலை கதிர்வீச்சு இன்னமும் உள்ளது. ஆமாம் இந்த கதிர்வீச்சு இப்போதும் உள்ளது, நீருபிக்கப்பட்டதுள்ளது. கொள்கைப்படி, பெருவெடிப்பின் போது துகள்களும் எதிர் துகள்களும் சரிக்கு சமாக இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்திருந்தால் உலகம் தோன்றியிருக்காது. (ஒன்றை ஒன்று அழித்திக்கொண்டிருக்கும்). ஆனால் அப்படி இல்லாமல் போனதால் தான் உலகம் தோன்றியிருக்கிறது. இது எப்படி நடந்திருக்க முடியும் என ஆராய்வதில் தான் அந்த இடைப்பட்ட துகள்கள் இருக்கின்றன.

ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி சொல்லிய சொற்றொடர் இதை இன்னும் எளிமையாக விளக்கும். நீச்சல் குளிக்க போகிறவர்கள் அணிந்திருக்கும் உடையுனே குளிப்பதில்லை அல்லவா? அது போல் இந்த துகள்களும் மற்றயவை ஆக மாறலாம்.

மேலும் இந்த இடைப்பட்ட துகள்கள் கொஞ்சம் திருட்டுதனமும் பண்ணும். அதென்ன திருட்டுதனம். ஒரு நேர் துகள் தீடீர்ன்னு எதிர் துகளாக மாறிடும். இப்பதான் இங்க இருந்துச்சு ன்னு தேடினா வேற துகள் தான் இருக்கும். இதுமட்டும் இல்லாது இந்த இந்த மாதிரி இருக்கனும் ன்னா இருக்காது. அதெயெல்லாம் பத்தி தெரிஞ்சுக்க துகள்ளோட தன்மைகள் பத்தி அடுத்ததில் பார்க்கலாம்

ராஜசங்கர்