இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Thursday, June 17, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-40

இந்த பதிவுல துகளோட தன்மைகள் பத்தி பார்க்கலாம். பொதுவாவே தன்மைகள் அல்லது குணங்கள் அல்லது இயல்புகள் அப்படீன்னா எளிதாக புரியறமாதிரி தான் இருக்கும். ஆனா இந்த துகளின் தன்மைகள் அப்படி இருக்காது. அவைகளும் குவாண்டம்(சிறிய) ஆக்கி தான் சொல்லப்படும். ஆனாலும் மூலக்கூறுகள், தனிமங்களுக்கு இருப்பது போல், முன்னாடி படிச்ச விசைகள் ஒவ்வொன்னும் கட்டுப்படுத்தும் அல்லது தொடர்புடைய தன்மைகள் உண்டு. எடுத்துக்காட்டா புவியீர்ப்பு விசைக்கு எடை.

சரி இதுகளை ஒன்னு ஒன்னா பார்ப்போம்

1. எடை
முதல் தன்மை இது. எடையில்லாத துகள்களும் உண்டு அப்படீன்றத பார்த்திருக்கோம். புவியீர்ப்பு விசைக்கு இது தொடர்புடையது என்பது உங்களுக்கு தெரிந்ததுதான். இதிலும் நேர் துகள்கள் ஒரு எடையும் எதிர் துகள்கள் கொஞ்சம் அதிகமாகவோ குறைவாகவோ எடை கொண்டவை.

2. மின்னேற்றம்.
இது மின்-காந்த விசையோடு தொடர்பு கொண்டது. இதவச்சுதான் ஒரு துகள் நேர் துகளா எதிர் துகளான்னு தீர்மானிக்கறாங்க. இதுக்கு நேர்,எதிர்,நடுநிலை என மூன்று பிரிவுகள் உண்டு. பெரும்பாலான துகள் கள் இந்த அடிப்படையை கொண்டவை. சிலதுகள்கள் இந்த ஆட்டைக்கு வராம போறதும் உண்டும். அது பத்தி பின்னாடி

3. ஆயுள் காலம்
இத ஒரு துகள் இன்னொரு துகளாக மாற எவ்வளவு நேரம் பிடிக்கும் அல்லது அப்படியே நிலையாக இருக்கமா என சொல்லும் பண்பு. இத தனிதனி துகளுக்கு சொல்லாம இவ்வளவு துகள் மற்றொன்றா மாற இவ்வளவு நேரம் பிடிக்கும் எனவும் சொல்லுவாங்க. 

4. சுழற்சி
இந்த சுழற்சி அப்படீன்றது ஒரு பம்பரம் சுத்துனா ஒரு விநாடிக்கு எவ்வளவு சுத்து சுத்துன்னு சொல்றமாதிரி தான் ஆனா கொஞ்சம் வித்தியாசம் ஆனது. பம்பரம் ஒரு சுத்து சுத்த இவ்வளவு விநாடிகள் எடுத்துக்குது என சொல்லுவோம் இல்லையா ஆனா இதுக்கு அப்படி சொல்ல முடியாது. ஏன்னா இதோட சுழற்சி என்பது 360 பாகைகளுக்கு மேல இருக்கும். இத பத்தி விரிவா அப்புறமா பார்க்கலாம்.

5. நிறம்
நிறம் அப்படீன்னா பச்சை,சிகப்பு ன்னு நினைச்சிக்காதீங்க. முந்தைய பதிவில் குவார்க்குகள் ஆறுவகையாக பிரிக்கபடுதுன்னு பார்த்தோம் இல்லையா அந்த ஆறு வகைகள் தான் இந்த நிறங்கள். இதுவும் சுழற்சி மாதிர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும். இந்த தன்மை வலு விசையோட தொடர்பு உடையது

மேற்சொன்ன தன்மைகளை வச்சே துகள்களை புரிஞ்சுக்க முடியும். இந்த தன்மைகளை பத்தி விரிவா அடுத்த பதிவுல பார்க்கலாம்

No comments:

Post a Comment