இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Monday, July 19, 2010

உயிர்தளிப்பு கொள்கை-4

இந்த பதிவில் இனப்பெருக்கம் ஏன் முக்கிய பங்கு வகிக்கிது என பார்க்கலாம்

ஒரு உயிர் மற்றொன்றாக மாறுவதற்கு கீழ்கண்ட காரணிகள் இருக்கவேண்டும்.

1. உயிரி ஒரு புதிய இயல்பினை கொண்டிருக்கவேண்டும்.

2. அந்த இயல்பானது அதன் சந்ததிகளுக்கு எடுத்து செல்லப்பட கூடியதாக இருக்கவேண்டும்

3. அந்த இயல்பானது மற்ற உயிரிகளில் இருப்பதை விட சிறந்ததாக இருக்கவேண்டும்.

இதில், இயல்பினை சந்ததிகளுக்கு எடுத்து செல்வதில் தான் இந்த மாற்றம் நடைபெறுதலே இருக்கிறது. பல பண்புகளை அடுத்த சந்ததிகளுக்கு எடுத்து செல்ல முடியாது. அவைகள் இதில் வராது.

இப்போ மனிதர்களின் உடலமைப்பில் எது இந்த மாதிரியான இயல்பு என பார்த்தால், கன்னத்தில் குழி விழுதல், தாடையில் பிளவு போன்ற அமைப்பு இருத்தல் போன்றவை இதில் அடங்கும்.

இதில் மிருகங்கள் என பார்த்தால், கொம்பு வளர்தல், தசைகளில் கொழுப்பு இருக்கும் அளவு என அவைகள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக நாட்டு மாட்டு கொம்புகளும், வெளிநாட்டு ஜெர்சி மாட்டு கொம்புகளும்.

இந்த இயல்புகள் மாறுவதில் நிறைய வகைகள் உள்ளன. இதிலும் ஆதிக்கம் செலுத்தும் இயல்புகள், ஆதிக்கம் செலுத்தாத இயல்புகள் என் இரண்டு பெரிய வகைகள் உண்டு அதை மட்டும் பார்ப்போம்.

கன்னதில் குழி விழும் ஆணும், கன்னத்தில் குழி விழா பெண்ணும் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு கண்டிப்பாக கன்னத்தில் குழி விழும்.

அதே சமயம் நீலக்கண்ணுடைய ஆணும், பழுப்புக்கண்ணுடைய பெண்ணும் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தை பழுப்பு கண்ணையே கொண்டிருக்கும்.

இப்போ கன்னத்தில் குழி விழுதல் ஆதிக்கம் செலுத்தும் இயல்பு, நீலக்கண் ஆதிக்கம் செலுத்தா இயல்பு.

மேற்கொண்டு உயிர்தளிப்பு கொள்கைக்கு இருக்கும் எதிர் வாதங்களை பார்ப்போம்.

Saturday, July 10, 2010

உயிர்தளிப்பு கொள்கை-3

முதல் பதிவில் நைலான் தின்னும் பேக்ட்ரீயா ஒன்றை பத்தி பார்த்தோம். அதுலையே இந்த மாதிரி நடப்பது தான் உயிர்தளிப்புன்னும் பார்த்தோம். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதில் தான் இதன் சூட்சுமமே இருக்கு.

ஆனா இது எப்படி நடக்குது? ஜீன்கள் மாறுவதாலும், அப்படி மாறிய ஜீன்கள் இருக்கும் உயிர்கள் மாறாத ஜீன் உள்ள உயிர்களை விட அதிகமாக வாழ்வதாலும் நடக்கிறது.

டார்வின் இந்த உயிர்தளிப்பை சொன்னப்போ அவருக்கு இந்த ஜீன், அதன் மாறுதல் எல்லாம் தெரியாது. ஆனா அவர் ஏன் நடக்குது சொன்னார். இத வச்சுக்கிட்டு கொஞ்சம் பேர் டார்வினுடைய கொள்கை சரி கிடையாது, அப்படி இப்படி ன்னு எல்லாம் சொல்றாங்க.  அதுக்கப்புறம் வந்தவங்களும் இவரோட கொள்கைய நீருபிச்சாங்க.

ஜீன் அப்படீங்கறது ஒரு உயிரினத்தின் உடலை அல்லது அமைப்பை பற்றிய தகவல்களை வச்சிருக்கும். இது எல்லாமே கார்பன்,ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது.

டார்வினோட கொள்கைக்கு அடுத்த எதிர்ப்பு உயிரற்றதில் இருந்து உயிர் வந்துச்சுன்னா நாம எப்படி யோசிக்கிறோம்? நவீன மருத்துவம் இந்த கேள்விகளுக்கு எளிதான விடை சொல்லிருச்சு. எல்லோருக்கும் தெரிந்ததும் கூட. மது அதாங்க சாராயம்,விஸ்கி,பிராந்தி முதலியவற்றை குடித்தால் நினைவு தடுமாறுது இல்லையா? அது வெறும் வேதிவினைதான். இதே போல மற்றவற்றையும் வேதிவினைகள் மூலமா சொல்லிடலாம். அதே மாதிரிதான் இந்த புதிய திறன்கள் வருவதையும் வேதிவினைகள் மூலமா சொல்லிடலாம்.

இந்த ஜீன்களின் மாறுதலில் இனப்பெருக்கம் தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிது என பார்த்தோம் இல்லையா அது ஏன் என அடுத்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, July 6, 2010

உயிர்தளிப்பு கொள்கை-2

உயிர்தளிப்பு கொள்கை கேள்விகள் அடுத்து வரும் இடம், எவ்வாறு இயற்கையிலான தேர்வு நடைபெறுகிறது என்பது தான்? வேறு விதமா சொல்லனும் னா இந்த வேலைய யார் செய்யறாங்க? யாரும் செய்யாம தானாதான் நடக்குது. அப்போ தானாவே உயிரினங்கள் உருவாச்சா ன்னு கேள்வி கேட்டா ஆமாம் தான் பதில்.

இங்க தான் கொஞ்சம் இடிக்குது இல்லியா? அதெப்படி உயிரற்ற பொருள்களில் இருந்து உயிரி தோன்ற முடியும்?

இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் கழிச்சி பார்ப்போம். முதல்ல உயிர் தோன்றி விட்டது அதுக்கப்புறம் அது எப்படி மத்த உயிரினமா பரிணாம வளர்ச்சி அடையுதுன்னு பார்க்கலாம். இது ஏன்னா ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறுவது உயிரியியல் மட்டும் தான். ஆனா உயிர் தோன்றியதை புரிஞ்சுக்க வேதியியல், இயற்பியல் எல்லாம் தேவைப்படும்.

சரி, இப்போ உயிர் தோன்றியாச்சு, நீரில் வாழும் உயிரினங்கள் மட்டும் இருக்கும் காலகட்டத்தில் இருக்கோம் என வச்சுக்குங்க. அதுல நீரில் வாழ்பவை சாப்பிட என்ன பண்ணும்?

இன்னொரு மீனையோ அல்லது உயிரினத்தையோ புடிச்சு சாப்பிட வேண்டியது தான். அப்படீன்னா ஒரு மீன் தன்னை தற்காத்து கொள்ள அல்லது மற்றொரு மீன் அதை சாப்பிடுவதில் இருந்து தப்பிக்க என்ன செய்யும்?

இந்த கேள்வி தான் உயிர்தளிப்பு கொள்கையின் அடிப்படை. ஒரு உயிரினம் உயிர்வாழ தேவையான சூழ்நிலை இல்லாத போது அதற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துகொள்கிறது. இதைத்தான் இயற்கை தேர்வு என்று சொல்கிறார்கள். இயற்கை தேர்வு என்பது கடவுளுக்கு பதிலாக இயற்கையை வைப்பதில்லை. அது தானாக நடக்கிறது.

திறமைகளை வளர்த்துக்கொள்ளாமலே உயிரினங்கள் இருக்கமுடியுமா என்றால் அதுவும் முடியும் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படதாத வரையில், சுருக்கா சொன்ன அதை யாரும் பிடித்து தின்காத வரையில் அந்த உயிரினம் திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டியதில்லை.

உயிர் வாழ்ந்தாச்சு, அடுத்தது என்ன? இனப்பெருக்கம் தான். உயிர்தளிப்பு இனபெருக்கத்தில் என்ன பங்கு வகிக்கிறது என பார்த்தா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இனப்பெருக்கத்தில் தான் ஒரு உயிரின் திறமைகள் வளர்வதும், தேவையற்ற பாகங்களை உதிர்ப்பதும் ஆக அந்த சூழ்நிலையில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வேலை ஆனது நடக்கிறது.

இந்த பகுதியில் உயிர்தளிர்ப்பின் அடிப்படையான இயற்கை தேர்வு என்பது பற்றி பார்த்தோம், அடுத்ததில் இது எவ்வளவு தூரம் உண்மை என பார்போம்