இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Monday, August 9, 2010

உயிர்தளிப்பு கொள்கை-5

டார்வினின் கொள்கைக்கு அடுத்த எதிர்ப்பாக இன்னும் என்னென்ன இருக்கிறது என பார்ப்போம்.

டார்வினின் கொள்கை உயிரிகள் மாற்றமடைகின்றன. புதிய தகுதிகளை வளர்த்துக்கொள்கின்றன என சொல்லிட்டு போயிட்டாலும் அதை அறிவியலார் எல்லாருமே அப்படி ஏத்துக்கல. டார்வின் சொன்னவுடனே எல்லாரும் ஆமாம் சாமி போடறதுக்கு அவுரு என்ன இந்தியாவுல ஏதேனும் கட்சி தலைவராவாக இருந்தார்?

டார்வின் காலத்துக்கப்புறம் உயிரியல் துறையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. மரபணுக்கள், நுண்ணுயிரிகள் என புதிய துறைகளே வந்தன. இதில் ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும் டார்வின் சொன்னதை வச்சு ஆராய்ச்சி செஞ்சாங்க. அதாவது ஒவ்வொரும் டார்வின் கொள்கை உண்மையா இல்லையா என ஆராய்ந்தாங்க.

இதில் ஒவ்வொரு துறையை சேர்ந்தவரும் டார்வின் சொல்லும் மாற்றங்கள் எப்படி வரலாம் என கருத்துருக்களை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கியவை மீண்டும் ஆராயப்பட்டு ஒத்துகொள்ளப்பட்டன. சரி அப்படி என்ன கருத்துருக்கள் வந்தன என பார்க்கலாம்

1. மரபணு மாற்றம்
2. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்
3. இனப்பெருக்கம்
4. வேறு குழு வழியான இனப்பெருக்கம்
5. குழுக்கிடையில் இனப்பெருக்கம்
6. இணை உயிர் தளிப்பு

இப்படியாக நிறைய விளக்கங்கள் இருக்கு. இதிலும் துணை பிரிவுகளை சேர்த்தால் டார்வினின் கொள்கை இப்படி விரிந்து உள்ளதா எனத்தோன்றும்.

சரி இப்படி இருக்கறத ஏன் பார்க்கவேண்டும்? இப்படி பிரிவுகள் இருப்பதை கொண்டு டார்வின் கொள்கை ஒழுங்கற்றது, எல்லா அறிவியலாளர்களும் அதோடு ஒத்து போவதில்லை என சொல்லி  வருகிறார்கள். மேலும் இந்த விளக்கங்களை திரித்து சொல்லி டார்வினின் கொள்கை பொய் என நீருபிக்க முயல்கிறார்கள். உண்மையான விளக்கத்தை யாரும் படிக்க மாட்டாங்க என்ற நம்பிக்கைதான். :-)

மேலே சொன்ன விளக்கங்கள் அல்லது பிரிவுகள் எல்லாமே அடிப்படையில் ஒன்றை தான் சொல்லு. எப்படீன்னா நோய் வர கிருமிகள் தான் காரணம் என்றாலும் ஒரு சில நோய்கள் பாக்டீரியா மூலமும் ஒரு சில வைரஸ் மூலமும் வரலாம். இதில் பாக்டீரியாக்கள் ஒருவிதமாவும் வைரஸ்கள் வேறு விதமாகவும் செயல்படும். இதில் வைரஸ்கள் எப்படி செயல்படுகிறதோ அதை கொண்டு பாக்டீரியாக்கள் செயல்படுவதை தவறு என சொல்வதை போல.

நான் சிறு வயதில் படிக்கும் பொழுது ஒரு பாடம் உண்டு. இரண்டு பாத்திரங்கள் எடுத்துக்கொண்டு ஒன்றில் மாமிசத்தை மூடியும் இன்னொன்றில் மாமிசத்தை மூடாலும் வைத்தால் சில நாட்களில் மூடாமல் வைத்த பாத்திரத்தில் மட்டும் பூச்சிகள்,கிருமிகள்,புழுக்கள் இருக்கும். இது காற்றுப்புகாமல் வைத்தால் வெளியில் உள்ள ஏதும் உள்ளே வரமுடியாது. இதை வைத்துகொண்டு பாத்தீர்களா உயிரற்றதில் இருந்து உயிர் வரமுடியாது எனவே டார்வினின் கொள்கை பொய் என சொல்லும் ஆட்களும் உண்டு. இதுக்கு என்ன சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க.

மேற்கொண்டு, இந்த மாதிரி ஒரு வாதத்தையும் பார்ப்போம்.

மரத்திற்கு மரம் தாவிய குரங்கு இனம் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தது. இதில் வால் சுருங்கியது. கை விரல்களும் கால் விரல்களும் ஒன்று போலிருந்தது பின்பு கால்விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போதிருக்கும் நிலைக்கு வந்தன. இதில் இந்த கொஞ்சம் கொஞ்சம் சொன்னா அது எப்படி எந்த வேகத்தில் நடந்தது. வருசத்துக்கு கால் மில்லி மீட்டர் என நடந்ததா அல்லது வருசத்துக்கு கால் செண்டி மீட்டர் என நடந்திருக்குமா?

இதுக்கு ஒரு அறிஞர் தொல்லியல் படிமங்களை அலசி ஆராய்ந்துட்டு உயிர் தளிப்பு படுவேகமாக தான் நடந்திருக்கலாம். ஏன்னா படிமங்களில் இடைப்பட்ட உயிரிகள் அதிகமாக இல்லை அப்படீன்னார். அதாவது 80 லட்சம் வருடங்களில் நடப்பது 80 ஆயிரம் வருடங்களில் நடந்தால் அது படிமங்களில் சிக்குவது கடினம்.

மேற்சொன்னத டார்வின் கொள்கைக்கு எதிராக வைக்கும் ஆள்கள், ஐ இங்க பாத்தியா படிச்ச ஆளே சொல்லிட்டார் உயிர்கள் இப்போது இருப்பது போல் அப்படியே தான் வந்துச்சு அதுனால டார்வின் கொள்கை பொய் என பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க.

இன்னும் இருக்கும் ஓவ்வொன்னா வரும்.

4 comments:

தருமி said...

//எல்லாரும் ஆமாம் சாமி போடறதுக்கு அவுரு என்ன இந்தியாவுல ஏதேனும் கட்சி தலைவராவாக இருந்தார்?//

இல்ல, ஏதாவது 'அருள்' வந்து சொல்றவரரா....?

rajasankar said...

//இல்ல, ஏதாவது 'அருள்' வந்து சொல்றவரரா....?
//

:-)))

மஞ்சுபாரதி said...

உயிர்த்தளிப்பு பற்றிய தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள். நன்றி.

இயற்கை தன் அனைத்து உயிர்களுக்கும் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு என்ன தேவைப்பட்டதோ அதைப் பல தலைமுறைகளாக கொடுத்து வந்துள்ளது. குரங்கின் வால் ஒரு நல்ல உதாரணம். இன்னும் சுவாரசியமான உதாரணங்களை கொடுப்பீரா?

மஞ்சுபாரதி said...

உயிர்த்தளிப்பு பற்றிய தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள். நன்றி.

இயற்கை தன் அனைத்து உயிர்களுக்கும் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள அவற்றிற்கு என்ன தேவைப்பட்டதோ அதைப் பல தலைமுறைகளாக கொடுத்து வந்துள்ளது. குரங்கின் வால் ஒரு நல்ல உதாரணம். இன்னும் சுவாரசியமான உதாரணங்களை கொடுப்பீரா?

Post a Comment