இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Thursday, November 25, 2010

டார்வினின் பரிணாமக்கொள்கைக்கான எதிர்ப்புகள்

இன்றும் தமிழ் வலையுலகில் டார்வினின் பரிணாம/உயிர்தளிப்பு கொள்கையை எதிர்த்து வாதிடும் வலைப்பூக்களை படித்தால் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவுக்கும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் விடையளித்தாயிற்று

நானும் என் பங்குக்கு கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.

உயிர்தளிப்பு கொள்கை -1

உயிர்தளிப்பு கொள்கை-2

உயிர்தளிப்பு கொள்கை-3

உயிர்தளிப்பு கொள்கை-4

உயிர்தளிப்பு கொள்கை-5

(டார்வினின்) உயிர்தளிப்பு கொள்கை-6

ஆனா இதையும் படிச்சிட்டு அதெப்படி உயிரற்ற பொருளில் இருந்து உயிர் வரமுடியும்? என்று கேட்பார்கள். அதே நேரத்தில் எங்கள் கடவுள் மண்ணில் இருந்து மனிதன் போல உருவம் அதற்கு உயிர் கொடுத்தார் என்றும் சொல்வார்கள். அதில் மட்டும் எப்படி உயிரற்ற பொருளுக்கு உயிர் வந்தது?

இதற்கும் மேலான டார்வினின் பரிணாமக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அதே பரிணாமகொள்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். அதை படித்துவிட்டு வந்த மருத்துவர்களிடம் போவார்கள். இவர்கள் பரிணாமகொள்கையை ஏற்காத மருத்துவர் பார்த்து போகலாமே?

இங்கு மருத்துவ பாடத்தில் பரிணாமகொள்கையை வைத்து விட்டார்களா என்று அறிவுபூர்வமாக கேட்பவர்களுக்கும் பதில் சொல்லியாகவேண்டும். கொஞ்ச நாள் முன்னாடி சூப்பர் பக் எனப்படும் அதிசக்தி கிருமி ஒன்று டெல்லியில் கண்டறியப்பட்டதாக செய்தி வந்தது. அது இந்தியாவில் வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலருக்கு இருப்பதாக சொல்லப்பட்டது.
அந்த புது வகை கிருமியை இப்போதிருக்கும் மருந்துகளால் அழிக்க முடியாது. ஏன் அது இப்போதிருக்கும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்றுவிட்டது. கொஞ்ச நாள் போனால் இந்த கிருமி பலருக்கு பரவினால் அதை தடுக்க முடியாது. ஆராய்ச்சி செய்து புதிய வகை மருந்து கண்டறிந்தால் மட்டும் உண்டு.

இதே போன்ற விவசாயத்தை தாக்கும் பூச்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறனை பெற்று விடுகின்றன. எப்படி இந்த எதிர்ப்பு திறன் வருகிறது. வேறென்ன பரிணாம மாற்றம் தான். இது உயிர்தளிப்பு அதிவேகமாக நடைபெறுவதற்கு ஓர் உதாரணம். இங்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விதத்தை சொல்லியாகவேண்டும். சின்னம்மை எனப்படும் நோய் பெரியம்மை தாக்கப்பட்டவர்ளுக்கு வருவதில்லை என்று கண்டுபிடித்தார்கள். ஏன் வருவதில்லை பெரியம்மைக்கான வைரஸ்கள் சின்னம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தருகின்றன. இதுவும் பரிணாமம் நோய்த்தடுப்பில் பயன்பட்டதற்கான ஒர் ஆதாரம்.

இப்படியாக ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த புத்தகத்தில் இருக்கிறது, இன்னார் சொல்லிவிட்டு போய்விட்டார் அதனால் இனிமேல் எப்போதும் இப்படித்தான் என்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியபோவதில்லை.