இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Thursday, November 25, 2010

டார்வினின் பரிணாமக்கொள்கைக்கான எதிர்ப்புகள்

இன்றும் தமிழ் வலையுலகில் டார்வினின் பரிணாம/உயிர்தளிப்பு கொள்கையை எதிர்த்து வாதிடும் வலைப்பூக்களை படித்தால் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவுக்கும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் விடையளித்தாயிற்று

நானும் என் பங்குக்கு கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.

உயிர்தளிப்பு கொள்கை -1

உயிர்தளிப்பு கொள்கை-2

உயிர்தளிப்பு கொள்கை-3

உயிர்தளிப்பு கொள்கை-4

உயிர்தளிப்பு கொள்கை-5

(டார்வினின்) உயிர்தளிப்பு கொள்கை-6

ஆனா இதையும் படிச்சிட்டு அதெப்படி உயிரற்ற பொருளில் இருந்து உயிர் வரமுடியும்? என்று கேட்பார்கள். அதே நேரத்தில் எங்கள் கடவுள் மண்ணில் இருந்து மனிதன் போல உருவம் அதற்கு உயிர் கொடுத்தார் என்றும் சொல்வார்கள். அதில் மட்டும் எப்படி உயிரற்ற பொருளுக்கு உயிர் வந்தது?

இதற்கும் மேலான டார்வினின் பரிணாமக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அதே பரிணாமகொள்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். அதை படித்துவிட்டு வந்த மருத்துவர்களிடம் போவார்கள். இவர்கள் பரிணாமகொள்கையை ஏற்காத மருத்துவர் பார்த்து போகலாமே?

இங்கு மருத்துவ பாடத்தில் பரிணாமகொள்கையை வைத்து விட்டார்களா என்று அறிவுபூர்வமாக கேட்பவர்களுக்கும் பதில் சொல்லியாகவேண்டும். கொஞ்ச நாள் முன்னாடி சூப்பர் பக் எனப்படும் அதிசக்தி கிருமி ஒன்று டெல்லியில் கண்டறியப்பட்டதாக செய்தி வந்தது. அது இந்தியாவில் வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலருக்கு இருப்பதாக சொல்லப்பட்டது.
அந்த புது வகை கிருமியை இப்போதிருக்கும் மருந்துகளால் அழிக்க முடியாது. ஏன் அது இப்போதிருக்கும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்றுவிட்டது. கொஞ்ச நாள் போனால் இந்த கிருமி பலருக்கு பரவினால் அதை தடுக்க முடியாது. ஆராய்ச்சி செய்து புதிய வகை மருந்து கண்டறிந்தால் மட்டும் உண்டு.

இதே போன்ற விவசாயத்தை தாக்கும் பூச்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறனை பெற்று விடுகின்றன. எப்படி இந்த எதிர்ப்பு திறன் வருகிறது. வேறென்ன பரிணாம மாற்றம் தான். இது உயிர்தளிப்பு அதிவேகமாக நடைபெறுவதற்கு ஓர் உதாரணம். இங்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விதத்தை சொல்லியாகவேண்டும். சின்னம்மை எனப்படும் நோய் பெரியம்மை தாக்கப்பட்டவர்ளுக்கு வருவதில்லை என்று கண்டுபிடித்தார்கள். ஏன் வருவதில்லை பெரியம்மைக்கான வைரஸ்கள் சின்னம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தருகின்றன. இதுவும் பரிணாமம் நோய்த்தடுப்பில் பயன்பட்டதற்கான ஒர் ஆதாரம்.

இப்படியாக ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த புத்தகத்தில் இருக்கிறது, இன்னார் சொல்லிவிட்டு போய்விட்டார் அதனால் இனிமேல் எப்போதும் இப்படித்தான் என்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியபோவதில்லை.

17 comments:

Sindhan R said...

தமிழுக்கு அவசியமானதொரு பணியைச் செய்து வருகிறீர்கள் ... வாழ்த்துக்கள் ...

Atheist said...

நண்பர் ராஜசேகர்,

தமிழ் வலைதளங்களில் இன்னும் சிலர் பரிணாம கோட்பாட்டை ஆதரிப்பதை கண்டு சிரிப்புதான் வருகின்றது என்று நாங்களும் சொல்லலாம் அல்லவா?. ஆனால், எதிர்ப்பவரோ ஆதரிப்பவரோ என்ன காரணங்களுக்காக பரிணாமத்தை எதிர்க்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்று ஆராய்வதே நேரான பார்வையாக இருக்க முடியும்.

[[[[[[இதற்கும் மேலான டார்வினின் பரிணாமக்கொள்கையை எதிர்ப்பவர்கள் அதே பரிணாமகொள்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். அதை படித்துவிட்டு வந்த மருத்துவர்களிடம் போவார்கள்
.
.
.
இதே போன்ற விவசாயத்தை தாக்கும் பூச்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்பு திறனை பெற்று விடுகின்றன. எப்படி இந்த எதிர்ப்பு திறன் வருகிறது. வேறென்ன பரிணாம மாற்றம் தான்]]]]]]]

இது பரிணாமத்திற்கு ஆதாரமா? உயிரியலில் ஏற்படும் முன்னேற்றங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவார்கள் பரிணாமவாதிகள். இது காலங்காலமாக நடந்து வருவது தான். ஆனால் அவர்களுடைய வாதங்கள் என்றுமே நிலைத்ததில்லை. அதுபோலத்தான் இந்த வாதமும்..

லீ ஸ்பேட்னர் இது குறித்து அவருடைய புத்தகத்தில் (Not by Chance) தெளிவாக விவரித்திருக்கிறார். இதுவெல்லாம் பரிணாமத்திற்கு ஆதாரம் கிடையாது. கீழே உள்ள பதிவையும் பாருங்கள்,

http://www.truthinscience.org.uk/site/content/view/175/65/

மருந்துகளுக்கு எதிரான தன்மைகளை வளர்த்து கொள்ளும் கிருமிகள் ஏன் அப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தீர்களானால் இவையெல்லாம் பரிணாமத்திற்கு ஆதாரமில்லை என்று புரிந்து கொள்வீர்கள். பரிநாமவாதிகளின் சூழ்ச்சிகளையும் புரிந்து கொள்வீர்கள்.

மற்றோன்றையும் புரிந்து கொள்ளுங்கள், பரிணாமத்தை எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டவையெல்லாம் பிரச்சனையாக இருந்ததில்லை. இதிலிருந்து அது வந்தது என்பதில் தான் பிரச்சனையே.

பரிணாமத்திற்கு ஆதாரம் என்று இதுவரை ஒன்றுமில்லை. நேரான பார்வையில் ஆராய்ந்து பார்த்தீர்களானால் இந்த உண்மையை புரிந்து கொள்ளும் காலமும் தொலைவில் இல்லை.

rajasankar said...

ஸீ பேட்னர் பாக்ட்ரீயா எதிர்ப்பு சக்தி பரிணாமத்திற்கு ஆதாரம் இல்லை என்று சொல்கிறார். சரி வச்சுக்குவோம் அப்படீன்னா இதுவரைக்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு கட்டுபட்டு வந்த பாக்டீரியா போய் சூப்பர் பக் அதாவது எந்த ஆண்டிபயாட்டிக் மருந்துக்கும் கட்டுப்படாத பாக்டீரீயா எங்கிருந்து வந்ததுன்னு சொல்லமுடியுமா?

நோய் எதிர்ப்பு சக்தி வேறு நோயே வராமல் இருக்கும் திறன் வேறு. நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் நோய் வரும் ஆனால் பாதிப்பு இருக்காது. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தால் பரிணாமம் புரியும்.

Atheist said...

அறிவியல் என்பது மாறக்கூடியது. இன்று எந்த மருந்துக்கும் கட்டுப்படாத உயிரி நாளைக்கு கண்டுபிடிக்கப்படும் புது வகை மருந்துகளால் கட்டுப்படுத்தப்படலாம். அதனால் பொறுத்திருப்பதே அறிவார்ந்த செயல்.

[[[[அந்த புது வகை கிருமியை இப்போதிருக்கும் மருந்துகளால் அழிக்க முடியாது. ஏன் அது இப்போதிருக்கும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்றுவிட்டது. கொஞ்ச நாள் போனால் இந்த கிருமி பலருக்கு பரவினால் அதை தடுக்க முடியாது. ஆராய்ச்சி செய்து புதிய வகை மருந்து கண்டறிந்தால் மட்டும் உண்டு]]]

நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள், நாளை கண்டுபிடிக்கப்படலாம் என்று. ஒருவேளை நாளை கண்டுபிடிக்கப்பட்டால், இது குறித்த தெளிவான தகவல் நமக்கு தெரியவரும். சற்று பொறுத்திருப்பதே சிந்திப்பவர்களின் செயலாக இருக்கமுடியும்.

நான் ஏற்கனவே கூறியது போல, உங்களுடைய கருத்துக்கள் பரிணாமத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது. பிரச்சனையே "இதிலிருந்து அது வந்தது" என்று வாதாடும் பரிணாமம் தான்.

உலகம் தோன்றி 5-15 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இதுவரை பரிணாமம் நடந்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. உயிரியலில்/மருத்துவ துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டும் டார்விநிஸ்ட்களின் கருத்துக்கள் என்றுமே எடுபட்டதில்லை. அதனால் தாங்கள் பரிணாமத்திற்கு ஆதாரமாக எதையாவது காட்டினால் நன்றாக இருக்கும்.

Atheist said...

"நீ நல்லவனா?" என்று கேட்டால் "அவன் மட்டும் நல்லவனா?" என்று கேட்பது எந்த அளவிற்கு அறிவுக்கு ஒத்து வராத ஒன்றோ அது போன்றது தான் உங்களுடைய பின்வரும் கருத்தும்

[[[ஆனா இதையும் படிச்சிட்டு அதெப்படி உயிரற்ற பொருளில் இருந்து உயிர் வரமுடியும்? என்று கேட்பார்கள். அதே நேரத்தில் எங்கள் கடவுள் மண்ணில் இருந்து மனிதன் போல உருவம் அதற்கு உயிர் கொடுத்தார் என்றும் சொல்வார்கள். அதில் மட்டும் எப்படி உயிரற்ற பொருளுக்கு உயிர் வந்தது?]]]

பரிணாமத்தை பற்றி பேசினால் கடவுளை இழுப்பது அறிவார்ந்தவர்கள் செய்யும் செயல்கலில்லை. பரிணாமம் பற்றி எழுதினால் அதற்கு முன் வைக்கப்படும் சவால்களை பற்றி விளக்கமளியுங்கள். அதற்கு பதிலாக "அங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்பது போன்ற கேள்விகள் உங்களின் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துவதாகவே அமையும்.

முதல் உயிரி எப்படி உருவாகி இருக்கும் என்று கேட்டால் அதற்கு ஆய்வு முடிவுகளை கொண்டு விளக்கமளியுங்கள். அதை விடுத்து "அது மட்டும் எப்படி சாத்தியம்?" என்று கேட்டால் நீங்கள் முதல் கேள்விக்கு பதில் சொல்லி விட்டதாக ஆகி விடுமா என்ன?

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், பரிணாமம் பொய்யென்றால் படைப்பு கொள்கை உண்மையென்று ஆகிவிடாது.

Atheist said...

நீங்கள் முன்பு இப்படி கூறினீர்கள்,

[[[[அந்த புது வகை கிருமியை இப்போதிருக்கும் மருந்துகளால் அழிக்க முடியாது. ஏன் அது இப்போதிருக்கும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்றுவிட்டது. கொஞ்ச நாள் போனால் இந்த கிருமி பலருக்கு பரவினால் அதை தடுக்க முடியாது. ஆராய்ச்சி செய்து புதிய வகை மருந்து கண்டறிந்தால் மட்டும் உண்டு]]]]]

பிறகு இப்படி கூறுகின்றீர்கள்,

[[[[[நோய் எதிர்ப்பு சக்தி வேறு நோயே வராமல் இருக்கும் திறன் வேறு.]]]]

??????????????????

rajasankar said...

//அதனால் தாங்கள் பரிணாமத்திற்கு ஆதாரமாக எதையாவது காட்டினால் நன்றாக இருக்கும்.
//

பரிணாமத்திற்கு ஆதாரமாக முன் பதிவுகளில் நிறைய காட்டியிருக்கிறேனே? அதை எல்லாம் படித்துவிட்டு பரிணாமத்தால் வந்ததா இல்லையா என சொல்லுங்கள்

rajasankar said...

//நோய் எதிர்ப்பு சக்தி வேறு நோயே வராமல் இருக்கும் திறன் வேறு//

ஒருவன் அறிவாளியாக இருப்பதற்கும் அவனுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் அறிவாளியாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம். பரம்பரையாக வருவது வேறு ஒரு தலைமுறைக்கு மட்டும் இருப்பது வேறு. ஒரு சில பயிற்சியால் வரும். ஒரு சில அனுபவத்தால் வரும். ஆனால் பரம்பரையாக போவதற்கு ஜீன்களில் இருந்தால் தான் உண்டு.

மனிதர்கள் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் பெரும்பாலான மிருகங்கள் தண்ணீர் தள்ளிவிட்டால் நீந்தும். இதில் ஒட்டகமும் அடக்கம். இது எங்கிருந்து வருகிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_10.html

நன்றி!

rajasankar said...

ராமசாமி,

நன்றி,

உங்கள் வலைப்பூவை பார்க்கிறேன்.

கார்பன் கூட்டாளி said...

திரு ராஜசேகர்,

என்னுடைய பதிவிற்கும் பரிணாம வாதிகளிடமிருந்து சரியான பதில் வராததால் பரிணாம கதைகளை அம்பல படுத்துவதில் தொய்வு ஏற்படுகிறது.தாங்களாவது அக்கேள்விகளுக்கு சரியான பதில்கள் இருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பது அனைவரும் அறிவர் தாங்களும் அறிவீர்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

rajasankar said...

கார்பன் கூட்டாளி,

தலைப்பை பார்த்தவுடன் கருத்து சொல்லிவிட்டீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய பதிவு பரிணாம கொள்கையை ஆதரித்து தானே எதிர்த்து அல்ல. நீங்கள் எழுதி உள்ள மனிதனுக்கு தேவையில்லான அங்கங்கள் பற்றியும் ஒரு பதிவு எழுதவேண்டும். இந்த வார இறுதிக்குள் எழுதுகிறேன்.

கார்பன் கூட்டாளி said...

நண்பர் ராஜசங்கர்,

பரிணாம கொள்கையில் தாங்கள் விளங்கி கொள்ள நிறைய இருக்கின்றது, அது சரியாக யோசித்து எழுதப்பட்ட கதை என்பதால் தங்கள் அதன் முழு விவரத்தை அறிந்துகொள்ளவில்லை, முழுமையாக தெரிந்து கொண்டு பதிவை தொடரவும்.

மேலும் தங்களின் "குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்" பதிவுகளை நன்றாக எழுதி உள்ளீர்கள், அனைத்தையும் பொறுமையாக படித்தேன், நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

yasir said...

தங்களின் பதிவை இப்பொழுது தான் பார்க்க நேர்ந்தது,நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

yasir said...

Atheist..
//பரிணாமத்தைப்பற்றி பேசினால் கடவுளை இழுப்பது அறிவுடைய செயலில்லை//

சகோதரரே பரிணாமக் கொள்கை கடவுள் படைப்புக் கொள்கை பாதிக்கின்றது என்பதாலேயே பல மதங்களும் அவற்றை நிராகரிக்கின்றன. அதனால்தான் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை கதை,கற்பனை,பொய் என்றெல்லாம் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு சில நூற்றாண்டிற்குள் அரியப்பட்ட ஆராய்ச்சியே கதை,கற்பனை எனும்போது ஆயிரம் நூற்றாண்டுகளைக் கடந்த வேதங்கள் ஏன் கற்பனையாக இருக்கக் கூடாது? பரிணாமக் கொள்கை கதை எனில் படைப்புக் கொள்கையை கட்டுக்கதை எனக் கூறலாமா?

Kishoke said...

உங்கள் பதிவுகள் அதாவது டார்வின் கொள்கை பற்றிய பதிவுகளை மேலும் தொடர வேண்டுகிறேன் ..அதோடு இன்றைய அறிவியல் டார்வின் கொள்கையை ஏற்றுக்கொண்டத ???? விளக்கவும்

Dr.Dolittle said...

i had answered some of the carbon friend's quesn in followin posts, have a look
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_03.html
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_07.html
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html

Post a Comment