இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Friday, January 29, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-33

அணுவுக்கு உள்ளே இருக்கும் துகள்ளும் துகள்களால் ஆனவை என்று முன்பே பார்த்திருக்கிறோம். அத எப்போ கண்டுபிடிச்சாங்க என இந்த பதிவில் பார்க்கலாம்.

போட்டான் எனறு அழைக்கபடும் துகள் தான் முதலா அணுவுக்கு இல்லாம வெளியே கண்டறியப்பட்ட துகள். இதைப்பத்தி முன்னாடியே பார்த்தாச்சு இல்லையா. அதனால மத்த துகளான நீயூட்ரினோ, போசான், பியான் என பார்ப்போம்.

நீயூட்ரினோ பத்தி 1930 ல்லியே ப்பவுலி என்பவர் நீயூட்ரினோ என்பவை இருக்கலாம் என கருதினார். ஒரு அணு மாறுபாடு நிகழ்வை விளக்குவதற்க்கான சமன்பாட்டில் வந்த சிக்கலை நீக்குவதற்க்காக இப்படீ ஒரு துகள் இருக்கலாம் என்று ஒரு கருதுகோள் ஒன்றை வெளியீட்டார்.

இந்த நீயூட்ரினோவை கண்டு பிடிக்கறது ஒரு சிக்கல் இல்ல நிறைய சிக்கல் இருந்தது. அது கீழ்க்கண்ட பண்புகளை கொண்டிருந்தது.

1. ஒளியின் வேகத்திற்கு இணையாக செல்லக்கூடியவை. எடை மிக்குறைவு.
2. மின்காந்த விசைகளால் பாதிக்கப்படாது
3. எந்த பொருள்கள் உள்ளேயும் ஊடுருவி செல்லும்.

இதனால 1959 ல் தான் இந்த நீயூட்ரினோ இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அப்படி கண்டுபிடிச்சவங்களுக்கு 1995 ல் நோபல் பரிசும் கொடுத்தாங்க.

1962 ல் வேறு மாதிரியான் நீயூட்ரினோக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த நீயூட்ரினோவுக்கும் எதிர் துகள்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை பற்றி அடுத்த பதிவில்

Friday, January 22, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-32

அணுவில் இருக்கும் துகள்களை விட மேலும் துகள்கள் இருக்கு என போன பதிவில் பார்த்தோம். அதெல்லாம் எப்படி வந்தது, நம்முடைய அறிவியலார்கள் அதை எப்படி கண்டுபிடித்தார்கள் என இப்பதிவில் பார்க்கலாம்.

அணுவை பிளக்கும் போது அதில் இருக்கும் ஒரு பகுதி நிறையானது சக்தியாக மாறுகிறது என்பதும் அது இந்த E=mc2 எனும் சமன்பாட்டால் கணக்கிடப்படுகிறது என்பதும் நீங்கள் அறிந்ததுதான். மேலும் கதிரியக்க தனிமங்கள் கதிரியக்கத்தை வெளியிட்டு பின் வேறு ஒரு தனிமம் ஆக மாறுவதும் இப்படிதான்.

இது அணு அளவில் மட்டும் இல்லாது துகள் அளவிலும் நடப்பது தான் இந்த அதிக துகள்களுக்கு காரணம். தனிமங்கள் வேறு ஒன்றாக மாறுவது போல இந்த துகள்களும் மற்றொன்றாக மாறும். இரண்டு துகள்கள் சேர்ந்து இன்னொரு துகளாக மாறும்.

இந்த மாறுவது decay (அழுகுவது அல்லது படிப்படியாக குறைவது) என அழைக்கப்படுகிறது. ஆனால் துகள் தான் இருப்பதிலியே சிறியது என பார்த்தோம் அது எப்படி குறையும்?

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ராஜசங்கர்
குறிப்பு- பொங்கல் விடுமுறை கழித்து பதிவுகள் தொடரும். தாமதத்திற்க்கு வருந்துகிறேன்.

Monday, January 4, 2010

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-31

இந்த பதிவுல அடிப்படை துகள்கள் பத்தி பார்க்கலாம். இந்த புரோட்டான், எலக்ட்ரான் அப்படீன்னு பாத்தோம் இல்லையா அதுகளை உடைச்சா இவைகள் கிடைக்கும். என்னது புரோட்டான உடைக்க அது என்ன புரோட்டாவான்னு கேக்க கூடாது.

நீங்க தூரத்துல இருந்து  ஒரு வாகனம் வர்றத பாக்குறீங்க. அப்போ ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் தான் தெரியுது. ஆனா அது கிட்டக்க வந்ததுக்கப்புறம் அதுல இரண்டு விளக்கு இருக்குது என தெரிய வரும். அதே மாதிரி தான் இந்த துகள்களோட கண்டுபிடிப்பும். இதுல எதிர் துகள்களும் உண்டு.

இப்போ அடிப்படை துகள் என சொன்னா அத எப்படி கண்டுபிடிக்கறது? ஏன் புரோட்டான் கண்டுபிடிக்கறப்பவே இதெல்லாம் தெரியலையா என கேள்விகள் நிறைய வரும். இதெல்லாம் மாறா விதிகள் கொண்டு கண்டுபிடிப்பாங்க.

மாறா விதிகள் என்றால் நிறை மாறா விதி, ஆற்றல் மாறா விதி,  இப்படி. குவாண்டம் கொள்கையில் சுற்று மாறா விதி, நிறம் மாறா விதிகள் கூட இருக்கு. ஆற்றல் = எடை x ( ஒளியின் வேகம் ) ^2 என்ற சம்ன்பாடு நிறைய பேருக்கு தெரிந்தது தான். இது எடை மற்றும் ஆற்றலுக்கு உள்ள தொடர்பை சொல்லுது.

அடுத்த பதிவில் இந்த துகள்களின் அடிப்படை என்ன அதை எப்படி கண்டுபிடிச்சாங்க என எல்லாம் பார்க்கலாம்.

ராஜசங்கர்.