இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Monday, May 16, 2011

உயிர் தளிப்பு கொள்கை. அல்லது டார்வினின் பரிணாம கொள்கை -7

உயிர் தளிப்பு கொள்கையானது மிகச்சிக்கலான அமைப்புகளை கொண்டுவருமா என்ற கேள்வி திரும்ப திரும்ப வருகிறது. ஒரு குழுமத்தில் ஒருவர் ஒட்டகத்தின் சிறப்புகளை எடுத்துப்போட்டு பார்த்தாயா எப்படி இருக்கிறது இது தளிர்த்து வருமா என்கிறார். இன்னொருவர் என்னுடைய வலைப்பூவில் வந்து காணாமல் போன தொடர்புகள் எங்கே என கேட்டு நான் நேர் வழியில் இல்லை என்பதை வேறு விதமாக சொல்கிறார்.

ஆங்கிலத்திலே இதற்கு விளக்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. தமிழில் இருப்பதெல்லாம் மதவாத குப்பைகள் தாம். அவற்றை படிக்கும் அன்பர்களும் உண்மை என நம்பி அதையே வைத்து வாதாடுகிறார்கள். ஆனால் இவைகள் எல்லாம் பற்பல ஆதாரங்களை கொண்டு விளக்கப்பட்டவை. பற்பல முறை பரிசோதனைகளும் செய்யப்பட்டவை. முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன், கால்நடைகளை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யவித்து நோய்களை தாக்குபிடிக்க அல்லது பால் அதிகம் தரக்கூடிய வகைகளை கொண்டு வருவதே உயிர்தளிப்பு கொள்கையை நேரில் பார்க்க கூடிய சான்றாகும் என. இதே போல் இன்னமும் சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் இதைப்படித்து விட்டு அதெல்லாம் சிறு மாற்றங்கள் தானே, கண்கள் அல்லது சிறுநீரகம் போன்ற சிக்கலான அமைப்புகள் எப்படி வரும் என கேட்கிறார்கள்.

இங்கு ஒன்றை யோசிக்கவேண்டும், முழுக்குருடில் இருந்து மனிதனுடைய கண்ணை விட சக்தி வாய்ந்த கண்களை உடைய விலங்குகள் உண்டு. கழுகினால் பார்க்க முடிவதை நம்மால் முடியாது. அரையிருட்டில் தெளிவாக பார்க்க முடியும் பூனையை போல் நம்மால் பார்க்க இயலாது. கண்ணே இல்லாமல் சரியாக பறக்கும் வவ்வாலை போல் நம்மால் முடியாது. இவைகள் எல்லாம் அதிசயம் இல்லையா?

என்னைக்கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். ஒவ்வொன்றும் அதன் தேவைக்கேற்ப திறன்களை வளர்த்துக்கொள்கின்றன. மனிதனால் திட்டமிடுவது போல் எந்த விலங்குகளாலும் இயலாது. எனவே தான் மனிதனிடம் உடல் பலம் இல்லை என்றாலும் மற்றவற்றை அடக்கி ஆள முடிகிறது. எப்படி இந்த சிக்கலான அமைப்புகள் வந்தன என்று பார்பதற்கு முன் ஒரு கேள்வியை பார்ப்போம்.

ஒரு வேளை கடவுள் தான் மனிதனை திட்டமிட்டு படைத்தார் என வைத்துக்கொள்வோம். சும்மா ஒரு பேச்சுக்கு தான். அந்த மனிதனுடைய உடலமைப்பு சரியாகவா இருக்கிறது? மூச்சுவிடுவதற்கு சாப்பிடுவதற்க்கும் ஒரே துளை. வெளியே தனித்தனியாக தெரிந்தாலும் இரண்டும் போய் சேருவது ஓரிடம் தான். அதனால் தான் சாப்பிடும் போது பேசினால் விக்கல் எடுக்கிறது. உடலின் நடுப்பாகத்தில் கழிவுகளை வெளியேற்ற துவாரங்கள். வைக்கறதுக்கு வேற இடமே கிடைக்கலியா?

இலை, தழைகளை செரிக்க இயலா ஒரு வயிறு. கால்நடைகள் மாதிரி எல்லாத்தையும் சாப்பிட்டு உயிர் வாழற மாதிரி படைச்சிருந்தா எம்புட்டு சவுரியமா இருந்திருக்கும்? வாசனைகளை பிரித்தறிய தெரியாத மூக்கு. மற்ற விலங்குகள் மாதிரி மூக்கு இருந்திருந்தா மோப்பம் பிடிச்சே எதிராளி வர்றானா இல்லையானு தெரிஞ்சுக்கலாம்.  இதுக்கு மேலே நோய்கள் அப்படீன்னு போன நல்லாருக்காது அப்படீங்கறதுனால இத்தோடு நிறுத்துக்கிவும்.

இப்படியா ஒரு மோசமான வடிமைப்பு ஒரு நல்ல வடிமைப்பாளர் செய்வாரா? நல்ல அமைப்பா இருந்தா ஏகப்பட்ட நோய்கள் எதுக்கு வரனும்? அப்படி ஏதும் இல்லாம படைச்சிருக்கலாமே. சரி நோய்கள் வேண்டாம் மூளை கெட்டுப்போறத எடுத்தா இன்னும் பல விஷயங்கள் தெரியவரும். சூதாட்டம், போதை இதுக்கெல்லாம் அடிமையாவங்களுக்கு மூளையின் முன்புறமான பிரண்டல் லோப்ஸ் கெட்டு போயிடும். இந்த பகுதி தான் மனுசனுக்கு நல்லது கெட்டது சொல்லி இத செய்யாத, பாழுங்கிணத்து பக்கம் போனா விழுந்து அடிபடுவ என்றெல்லாம் சொல்லி காப்பாத்துது. இது மாறிட்டா அந்த நல்லது கெட்டது புரிஞ்சுக்க முடியாது, அடிமையாகி அந்த பழக்கம் இல்லாம இருக்க முடியாது என்ற சூழ்நிலை வரும்.

கடவுள் ஒழுங்கா படைச்சிருந்தா எதுக்கு இந்த மாதிரி எல்லாம் மூளையை வைக்கனும்? எதுக்கும் அடிமை ஆகாம வைச்சிட்டு போலாமே?

இருக்கும் உடல் அமைப்புகளிலேயே சிக்கலானது இந்த மூளை தான். இதுக்கு விளக்கம் சொல்லிட்டா மத்ததுக்கும் சொன்ன மாதிரி அப்படீன்றதால அதை பார்ப்போம்.

பெரும்பாலான உயிரினங்களில் மூளை என்பது சும்மா ஒப்புக்கு தான். சின்ன சின்ன வேலைகளுக்கு மட்டும் தான் அது பயன்படும். அதை வைரஸ் போன்ற உயிரினங்கள் சீக்கிரம் ஆக்கிரமிப்பு செய்யும். பின்னாடி திட்டமிடுதல், பலவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளல் என்பதெல்லாம் 99 சதவீத உயிரினங்களில் கிடையாது. அப்படி இருக்கும் போது இவைகள் எப்படி உயிர் வாழுகின்றன என்று பார்க்க மூளையே இல்லாத ஒரு செல் உயிரினங்கள் எப்படி உயிர் வாழுகின்றன என பார்க்கலாம்.

Cordyceps unilateralis அப்படீன்னு ஒரு பூசனம். இதுக்கு இனப்பெருக்கம் செய்ய தோதான இடம் வேணும். தோதான இடம்னா இந்த வெப்பநிலை, இவ்வளவு காற்றின் ஈரப்பதம் என இருக்கனும். அந்த மாதிரி இடத்துக்கு இதால போக முடியாது. ஏன்ன பூசனம் இல்லியா? இது என்ன பண்ணும் Camponotus leonardi அப்படீன்ற ஒரு எறும்பு வகையை போய் தாக்கும். எறும்போட மூச்சு விடும் குழல்கள் மூலமா உள்ள போய் எறும்போட சதை சாப்புட்டு நல்லா வளர ஆரம்பிக்கும். சரி இனிமே இனப்பெருக்கம் பண்ணலாம் அப்படீன்னு வந்தவுடன் இது என்ன பண்ணும், எறும்போட மூளைய தாக்கும். தாக்கி பக்கதுல நிறைய உணவு இருக்கற மாதிரியும் நிறைய எறும்புகள் அங்க இருக்கற மாதிரியும் ஒரு வாசனை வர்ர மாதிரி எறும்போட மூளைய உணரவைக்கும். இந்த எறும்பும் அதை உண்மை அப்படீன்னு நம்பி பக்கத்துல் இருக்கற புல் மேல ஒரு கிட்டத்தட்ட 25 செண்டிமீட்டர் ஏறி தன்னோட கொடுக்கால அத புல் அல்லது இலையோட தண்ட நல்லா புடிச்சு நின்னுக்கும்.

இதுக்கப்புறம் அதுக்கு சிக்கல் இருக்கு. மத்த எறும்புகளோ அல்லது நுண்ணியிரிகளோ வராம இருக்க இது நுண்ணியிர்க்கொல்லி ரசாயனங்களை காத்துல விடும். பின்னாடி எறும்போட தலைய பிளந்துகிட்டு இந்த பூசனம் வெளிய அமோக வரும்.  அந்த எறும்பு செத்து போய் கிடக்கும்(இத சொல்லனுமாக்கும்.)

இந்த கொடாக்கண்டன் பூசனத்துக்கு விடாக்கண்டன் எறும்புகள் என்ன செய்யும் தெரியுமா? இந்த மாதிரி ஒரு எறும்பு எசகு பிசகா திரியுது அப்படீன்னாலே உடனே அதை மத்த எறும்புகள் அதுங்க இருக்கும் இடத்துக்கு வெகு தூரம் கொண்டு போய் போட்டுட்டு வந்துரும். எப்பூடி.

இந்த பூசனத்த கண்டுபிடிச்சதால என்ன பயன் அப்படீன்றத பின்னாடி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இந்த படைப்புக்கொள்கை வாதிகளுக்கு ஒரு கேள்வி.

இந்த பூசனமும் எறும்பு இப்படியே படைக்கப்பட்டனவா? ஆம் என்றால் ஏன் இப்படி இருக்கு?  இல்லை அப்படீன்னா இத யார் படைச்சா?