இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Tuesday, September 20, 2011

குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்-43


இதிலே ஐன்ஸ்டைன் சொன்ன இரண்டு தியரிகளுகளையும் எப்படி பரிசோதித்தார்கள் என பார்ப்போம். பொது சார்பியல் புவீஈர்ப்பு விசை பற்றியது, சிறப்பு சார்பியல் பொருட்களின் நகர்தல் பற்றியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொது சார்பியலுக்கு தேவை வந்ததே நீயூட்டனின் விதிகள் பல கோள்கள் சலம்புவதை அதாவது முன் பின் போய் வருவதை விளக்க முடியவில்லை என பார்த்தோம். ஆக அப்படி ஒரு கோளின் சுற்றுப்பாதையை பொது சார்பியலால் விளக்க முடியுமா என்று பார்த்தார்கள்.

இரண்டாவது ஒளி வளையவேண்டும் மற்றும் ஒளிப்பட்டையில் முதலில் உள்ள நிறமே அதிகமாக தெரியவேண்டும்.

இந்த மூன்றும் ஐன்ஸ்டைன் சொல்லிய போது உடனடியாக சரிபார்க்கப்பட்டடு நீருபிக்கப்பட்டன. இருப்பினும் துல்லியமான பரிசோதனைகள் அளவீடுகள் சுமார் 1950 இல் தான் வந்தன.

முதலாவது பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட கோள், புதன் கிரகம். இது சூரியனை சுற்றி வருது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி சுற்றும் போது சுற்றுப்பாதை ஒன்றாகவே இருக்கும் பாதையில் மாற்றம் ஏதும் இருக்காது என நியூட்டனின் விதி சொல்லியது ஆனால் புதன் கிரகம் சுற்றும் பாதை அப்படி இருப்பதில்லை.

கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.
சிகப்பு நிறத்தில் இருப்பது நீயூட்டனின் விதிப்படி இருக்கும் பாதை. நீல நிறத்தில் இருப்பது உண்மையான பாதை. இந்த சிக்கலை தீர்த்துவைத்தது ஐன்ஸ்டைனின் கொள்கை.

அடுத்து பார்ப்பது ஒளி வளைவு

இது பரிசோதிப்பது பெரும் காரியம். ஒளி கொஞ்சூண்டு தான் வளையும். அது தாண்டி போகும் கோள் அல்லது நட்சத்திரம் பெரிதாக இருந்தால் இன்னும் கொஞ்சூண்டு வளையும். ஒளியை எப்படி வளைச்சு பரிசோதிக்கறது? இதுக்கு ஆர்தர் எடிங்க்டன் அப்படீன்றவர் ஒரு யோசனை கொண்டுவந்தார். எப்படீன்னா முழு சூரிய கிரகணம் ஆகும் போது சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் நல்லா தெரியும். சூரியகிரகணம் ஆகும் போது பூமியில் அந்த இடத்தில் இருந்து நட்சத்திரங்களின் இடத்தை பார்ப்போம் அதோ போல் கிரகணம் இல்லாத இடத்தில் இருந்தும் நட்சத்திரங்களோட இடத்தை பார்ப்போம். இந்த இரண்டுக்கும் வேறுபாடு இருந்தால் ஒளி வளையுது என உறுதியாக சொல்லிவிடலாம் அப்படீன்னார்.

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா சூரியனுக்கு அருகில் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளியை சூரியன் வளைக்கும். எனவே ஒரே சமயத்தில் பூமியில் இரண்டு இடத்தில் இருந்து அந்த நட்சத்திரத்தின் இடத்தை பார்த்தால் போதும். சாதாரணமா இதை பண்ண முடியாது, ஏன்னா பூமியின் இரவு பகல் வேறுபாடு. சூரிய கிரகணம் வரும் போதும் ஒரு சில நிமிடம் பூமியில் இரண்டு பக்கமும் இரவு இருக்கும் அப்போ இந்த பரிசோதனை பண்ணினா கண்டு பிடிச்சிடலாம்.

ஆர்தர் இதை 1919 ஆம் வருட முழு சூரிய கிரகணம் அப்போ செய்தார். ஐன்ஸ்டன் சொன்னது போல் ஒளி வளைவது உறுதிப்பட்டது. இதை ஐன்ஸ்டைனிடம் சொல்லி ஒருவேளை உங்கள் கொள்கை தவறு என சொல்லப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டார்கள். அதற்கு அவர், பரிசோதனை செய்தவருக்காக வருத்தப்படுவேன். அந்த கொள்கை எப்படியாயினும் சரியானது என்றார்.

அடுத்து ஓளியின் சிகப்புமாற்றம்/நீலமாற்றம் எனும் விளைவு,

ஒளி ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு போகும் போது சிகப்பாக மாறும்.
ஒளி ஈர்ப்புவிசை குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து அதிகமாக இடத்திற்கு போகும் போது நீலமாக மாறும்.

கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.

ஒரு நட்சத்திரத்தில் இருந்து கோளுக்கு போகும் ஒளி மாறுபடுகிறது.


நட்சத்திரங்களில் இருந்துவரும் ஒளி நமக்கு இப்படி மாறுபட்டே வரும்.

இதுதான் சுருக்கமாக ஒளி மாற்றம் எனும் விளைவு. இதை 1959 வரை சரியாக நீருபிக்கப்படவில்லை. 1959 இலே தான் துல்லியமாக நீருபித்தார்கள்.

ஐன்ஸ்டைனின் கொள்கைகளின் விளைவுகள் இன்னும் பல இருக்கின்றன. அதையெல்லாம் பின்பு பார்ப்போம். அடுத்த பதிவில் மீண்டும் குவாண்டம் கொள்கையின் உள்ளே செல்வோம்.

15 comments:

ராஜா MVS said...

நல்ல அறிவியல் தகவலுக்கு மிக்க நன்றி.. நண்பரே...

கக்கு - மாணிக்கம் said...

வெறும் நாற்ற அரசியல் கேவலமான சினிமா செய்திகள் மற்றும் நகைசுவை / நையாண்டி என நினைத்துக்கொண்டு கோணங்கித்தனமாக எழுதி தங்கள் மேதாவித்தனத்தை நிலைநிறுத்தி அதிக ஓட்டுகளையும் அதிக பின்னூட்டங்களையும் பெற்று "பிரபல பதிவர் "பட்டியலில் இடம் பெற்று இறுமாப்புடன் வளைய வரும் கிறுக்கு தமிழர்களின் மத்தியில் நீங்களும் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்ளலாம் அன்பரே. எவர் வந்தாலும் வராவிட்டாலும் சரி ஒட்டு விழுதாலும் சரி விழாவிட்டாலும் சரி தாங்கள் எழுதுவது நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

வெளங்காதவன் said...

கக்கு..

சிறந்த அறிமுகம்....

சத்தியமாய் அருமை...

bandhu said...

அருமையான விளக்கம். என் மரமண்டைக்கு கொஞ்சம் புரிகிறா மாதிரி சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் படிக்க விழைகிறேன்!

baleno said...

கக்கு மாணிக்கம் தந்த தகவல் மூலம் வந்தேன். உங்கள் பதிவு அருமையானது.

rajasankar said...

ராஜா , கக்கு மாணிக்கம், வெளங்காதவன், பந்து,

அனைவரின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. கண்டிப்பாக தொடருவேன்.

சிவா said...

nalla pathivu, vaazhthukkal

MANO நாஞ்சில் மனோ said...

தொடர்ந்து எழுதுங்கள் சார்....நானும் உங்கள் பாலோவர் ஆகிட்டேன்...

இரவு வானம் said...

வாழ்த்துக்கள் நண்பரே, நானும் இப்பொழுதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன், கக்கு மாணிக்கம் சார் பிளாக்கின் வழியாக, இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன்

Myfunds said...

Easy to understand. Best wishes to continue.

M.S.எட்வின் .R.K. said...
This comment has been removed by the author.
R.Elan. said...

அறிவியலை எளிமையாக சுவாரசியமாக தொடர்ந்து எழுதுங்கள்.தொடர்கிறோம் சகோ.

T. Arun Chakaravarthy said...

very nice...

கோவை2தில்லி said...

இன்றைய வலைச்சரத்தில் – புறாவும் பூவும் – ஒரு குட்டிக்கதை….

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_15.html

உங்கள் வலைப்பூ பற்றி சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்….

நட்புடன்

ஆதி வெங்கட்.

Rasikan-ரசிகன் said...

ஏன் இந்த தொடரை நிறுத்தி விட்டீர்கள்?..

தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாயிருக்கிறோம்...

Post a Comment