இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Wednesday, October 5, 2011

குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும் - 45

இதுவரைக்கும் மூன்று விசைகளை பத்தியும் அதுல இரண்டு விசைகள் எப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை அதனால் அவை ஒரே விசையாக கருதப்படுகின்றன என பார்த்தோம். முன் பதிவுகளில் துகளில் பலவகை பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் இருந்து முக்கியமான விசையான குறைவிசை வலுவிசை பற்றியும் அதன் விளைவுகள் எப்படீயிருக்கும் எனவும் பார்ப்போம்.

முதலில் முன்பதிவு சுருக்கம்
முதலில் அணு தான் மிகச்சிறு அளவாக இருந்தது, பின்பு அணுவிற்கு கரு இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு எலெக்ட்ரான், புரோட்டான், நீயூட்ரான் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது அவை பிளக்கமுடியாதைவை என கண்டறியப்பட்டது. அதன்பின் குவார்க்குகள், லெப்டான்கள், மியான்கள் போன்றவை கண்டறீயப்பட்டன. இவைகள் எலெக்ட்ரான்,புரோட்டான், நீயூட்ரான் போன்றவற்றை பிளந்து கண்டறியப்பட்டன.

இப்போ எலெக்ட்ரான்,புரோட்டான் உள் துகள்கள் இருக்கிறது என்றால் அவற்றை பிடித்து வைக்க ஏதேனும் விசை இருக்கவேண்டும் அல்லவா? அது எது?

இதை புரிஞ்சுக்க இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டும்.

நாம் உபயோகிக்கும் பொருட்கள் மூணு வகை என்பதை பள்ளியில் படிச்சிருப்ப்பீங்க. திட, திரவ, வாயு நிலையில் பொருட்கள் இருக்கின்றன. இதிலே திட நிலையில் அதன் மூலக்கூறுகளுக்கு இடையில் இருக்கும் ஒட்டும் விசை அதிகமாக இருக்கும். அதனால் தான் அவைகளுக்கு ஒரு வடிவம் இருக்கிறது. திரவ நிலையில் குறைவாகவும் வாயு நிலையில் மிக மிக குறைவாகவும் இருக்கும். 

நாம் அன்றாடம் செய்யும் வேலைகள்(சூடுபடுத்துதல், வெல்டிங், அறுத்தல்) இந்த மூலக்கூறுகளோடு நின்று விடுகின்றன. அவைகளை தாண்டி போகவேண்டும் என்றால் இன்னும் வேலை செய்யவேண்டும் அது என்ன வேலை?

அதற்கு சக்தியை எலெக்ட்ரானின் உருவ அளவில் செலுத்தவேண்டும். இப்போது பரபரப்பாக பேசப்படும் லார்ஜ் ஹைட்ரான் கொல்லிட்ர் இன் சக்தி எவ்வளவு தெரியுமா?

ஒரு டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுகள். அதாவது 14 கொசுக்கள் பறக்கும் சக்திக்கு சமமானது.

இதகேட்டா உங்களுக்கு சிரிப்புதான் வரும். ஒரு பத்து, பதினைந்து கொசு பறக்கும் சக்தியை உருவாக்கவா இவ்ளோ பில்டப் என? ஆமாம். இந்த சக்தியை ஒரு எலெக்ட்ரானின் அளவுக்கு குவிக்கவேண்டும் என்பதால் தான் இவ்ளோ பில்டப்

ஒன்றுக்கு பக்கத்தில் 15 பூஜ்ஜியம் போட்டு அதால் இரண்டை வகுத்தால் கிடைக்கும் அளவு தான் ஒரு எலெக்ட்ரானின் உருவ அளவு. இப்போ உங்களில் மூளையில் டக்குன்னு பல்பு எரியும். இதை அளவை பார்க்கமுடியுமா? முடியாட்டி ஏன் முடியாது? பார்க்க முடியாத அளவ எப்படி கண்டுபிடிப்பாங்க?

ஆகா, கேள்வி மேல கேள்வியா இருக்கே.

நம்முடைய கண்களால் பார்க்ககூடிய சிறு அளவு 0.05 மில்லி மீட்டர். இதுக்கும் மேல் சிறிய அளவுகளை வெறும் கண்ணால் பார்க்கமுடியாது. அதுக்கு நுண்ணோக்கி கண்டுபுடிச்சாங்கன்னு தெரியும். அதால் எவ்வளவு சிறிய அளவ பார்க்கமுடியும்? அந்த அளவு 500 நேனோ மீட்டர்கள். நேனோமீட்டர் என்பது 1/1000000000 மீட்டர். ஒரு மீட்டரை ஒரு பில்லியனால் வகுத்தால் கிடைக்கும் அளவு தான் இது.

இதுக்கும் சிறிய அளவுகளுக்கு எலெக்ட்ரான் நுண்ணோக்கி இருக்கு. அதுக்கும் சிறிய அளவுகளை என்ன பண்ண முடியும்? அதை வேற மாதிரி தான் பார்க்க முடியும். இதை பின்னாடி பார்ப்போம்.

முன்னை பார்த்த மாதிரி மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் விளைவால் நமக்கு உலோகம் என்பது உறுதியானதாக தெரிறதோ அப்படி எலெக்ட்ரான் என்பது அதற்குள்ளே இருக்கும் விசைகளால் ஒரே துகள் ஆக தெரிகிறது. இதிலே சொல்லும்போதே ஒரு துகள் எப்படி என தெரியத பிரிக்க முடியாத துகளை அடிப்படை துகள் எனவும் பிரிக்கமுடியும் துகளை கூட்டுத்துகள் எனவும் அழைக்க ஆரம்பிச்சாங்க. அதெப்படிங்க ஒரு துகள்ங்கிறீங்க அதை உடைக்க முடியும் எனவும் சொல்றீங்க என கேட்பவர்களுக்கு முன்பே சொன்ன விளக்கம் இப்பவும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி வேகமாக வருது. இது ஒரு ஹெட்லைட் போட்டிருக்கா இரண்டு போட்டிருக்கா என்பது கொஞ்சம் கிட்டே வந்தவுடன் தான் தெரியும் இல்லையா? அது போல் தான் இதுவும். இன்னோர் உதாரணம். ஒரு பத்துபேர் தூரமா நின்னு ஓருத்தருக்கொருத்தர் சத்தமா பேசிட்டு இருந்தா ஒரே சத்தமாத்தான் கேக்கும். அதை முரைச்சல் என்பார்கள். கிட்ட போனாத்தான் யார் என்ன பேசுறாங்க என கேட்கும்.

அடுத்த பதிவில் எப்போ இந்த அடிப்படைத்துகளை என்பதை வகுத்தாங்க, அதுக்கு எவ்வளவு சக்தி தேவைப்பட்டது என பார்க்கலாம்.

1 comment:

suryajeeva said...

physics படிக்க நல்ல வலை பூ கிடைச்சிடுச்சு

Post a Comment